அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச் சூடு

United States of America World Gun Shooting
By Fathima Nov 27, 2025 11:11 AM GMT
Fathima

Fathima

அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கி சூட்டில் இரு தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளதுடன் அவர்களின் நிலைமை மிக மோசமாக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

கடும் கண்டனம் 

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. 

அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச் சூடு | Shooting Near The White House Usa

இந்தத் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, பாதுகாப்பை மேலும் பலப்படுத்த உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன்படி, வாஷிங்டன் நகரத்துக்கு மேலும் 500 தேசிய பாதுகாப்புப் படை வீரர்களை அனுப்புமாறு பாதுகாப்புச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் குறித்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில் ஈடுபட்டவர், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் என அமெரிக்க புலனாய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு

வொஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அருகே, குறித்த துப்பாக்கிதாரி முதலில் அங்கிருந்த பெண் காவலரின் மார்பிலும், தலையிலும் துப்பாக்கியால் சுட்டுள்ளார். பின்னர் அங்கிருந்த மற்றொரு காவலரையும் நோக்கிச் சுட்டிருக்கிறார்.

அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச் சூடு | Shooting Near The White House Usa

இதனைக் கண்ட அருகில் இருந்த இன்னொரு காவலர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தாக்குதல் நடத்திய நபரைச் சுட்டு வீழ்த்தியுள்ளார்.

அதன்போது, துப்பாக்கிதாரிக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், அவருடைய உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

29 வயதான அவர், கடந்த 2021ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் நிலவிய குழப்பான சூழலின்போது அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தவர் என கூறப்படுகிறது.