பொலிஸார் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி ஒருவர் பலி
Gun Shooting
By Kamal
பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கந்தான பொல்பித்திமுக்களலான பிரதேசத்தில் இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
வீடு ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேககிக்கப்படும் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்யச் சென்றிருந்தனர்.
இந்த சம்பவத்தில் ஜேராஜ் என்ற நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.