களனியில் துப்பாக்கிச் சூடு: நால்வருக்கு ஏற்பட்ட விபரீதம்
Gampaha
Shooting
Sri Lanka Police Investigation
Crime
By Renuka
களனி - திப்பிட்டிகொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நான்கு பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்றைய தினம் (25.06.2023) இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிப் பிரயோகம்
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீதியோரத்தில் இருந்த குழுவினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களனி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.