சிறிலங்கன் எயார்லைன்ஸின் விற்பனை : அமைச்சர் வெளியிட்ட தகவல்

Nimal Siripala De Silva Sri Lanka Politician Sri Lanka
By Shalini Balachandran Jul 04, 2024 01:24 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

நிதிச் சுமைக்கு உள்ளான மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம் அடுத்த சில வாரங்களில் இந்திய மற்றும் ரஸ்ய நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சியிடம் விரைவில் ஒப்படைக்கப்படும் என இலங்கை அறிவித்துள்ளது.

இலங்கையின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்துள்ளதுடன் இந்தியாவின் 69 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேசிய விமான சேவை நிறுவனமான சிறிலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை செய்யப்படுவதற்கு பதிலாக மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படும் என அமைச்சர் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான முதலீட்டாளர்

தற்போதுள்ள விதிமுறைகளின் படி, விமான நிறுவனத்தின் பங்குகளில் 49 வீதத்தை மட்டுமே வேறொரு நிறுவனத்திற்கு மாற்ற முடியும், எனினும் பொருத்தமான முதலீட்டாளர் இதுவரை விருப்பம் தெரிவிக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்கன் எயார்லைன்ஸின் விற்பனை : அமைச்சர் வெளியிட்ட தகவல் | Shipping Services From Sri Lanka To India

இதற்கிடையில் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், எதிர்காலத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் திட்டத்தை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW