சாய்ந்தமருதில் அரச நிறுவனங்களை உரிய இடங்களுக்கு மாற்ற குழு அமைப்பு
தற்காலிகமான கட்டடங்களில் இயங்கி வருகின்ற சாய்ந்தமருது பொலிஸ் நிலையம் உட்பட பல அரச நிறுவனங்களை நிரந்திரமான இடங்களுக்கு இடமாற்றம் செய்வதற்கான பொருத்தமான இடங்கள் மற்றும் கட்டடங்களை இனங்காண்பதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையானது சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் நெறிப்படுத்தலில் புதன்கிழமை (12) புதன்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
இக்குழுவானது சாய்ந்தமருது பொலிஸ் நிலையம் உட்பட அரச நிறுவனங்கள் நிரந்திரமாக அமைக்கப்பட வேண்டிய இடங்களை ஆராயவுள்ளது.
போதைப்பொருள் பாவனை

இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி, பிரதேச செயலக திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட், உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா, கணக்காளர் நுஸ்ரத் பானு, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் ஏ. ஹிபதுல் கரீம் , சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்கள், திணைக்களங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் தற்போது சாய்ந்தமருது பொலிஸ் நிலையம் இயங்கி வருகின்ற இடம் கடந்த காலங்களில் போதைப்பொருள் பாவனையாளர்களினால் பயன்படுத்தப்பட்டு வந்திருந்த நிலையில் பல தரப்பினரின் வேண்டுகோளிற்கமைய துப்பரவு செய்யப்பட்டு புதிய பொலிஸ் நிலையமாக (2021.11.29) அன்று திறந்து வைக்கப்பட்டிருந்தது.
இதனால் இப்பகுதியில் உள்ள கடற்கரை பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனைகள் குறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








