10 வருடங்களின் பின் பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவன்!

Rakshana MA
தற்போது வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அக்கறைப்பற்று - ஆலிம் நகர் கிராமத்தை சேர்ந்த அஹமட் அஸ்மி மெஹ்தாப் அஹமட் எனும் மாணவன் 143 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
குறித்த மாணவனை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று(30) பாடசாலை அதிபர் கே.எம்.ஜனூன் தலைமையில் அக்/அஸ்-ஸிபாயா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த பாடசாலையில் மொத்தமாக 8 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் ஒரு மாணவன் மாத்திரமே 143 புள்ளிகள் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
10 வருடங்களின் பின்..
அத்துடன், குறைந்தளவு சனத்தொகையினை கொண்ட இந்த கிராமத்தில் இருந்து 10 வருடங்களின் பின்னர் குறித்த மாணவனினால் பெருமை சேர்க்கப்பட்டுள்ளதுடன் பொதுமக்களாலும் அந்த மாணவனுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த நிகழ்வின் போது குறித்த மாணவனுக்கு பரிசில்கள், சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பெற்றோர் கௌரவப்படுத்தலும் மதிய உணவு விருந்தும் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், இந்த நிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர் ஏ.எம்.ரஹ்மதுல்லாஹ் உள்ளிட்ட பலர் அதிதிகளாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |










