வவுனியாவில் விருந்தினர் விடுதி முற்றுகை: இளம் பெண் உட்பட நால்வர் கைது

Vavuniya Sexual harassment Sri Lanka Police Investigation
By Dharu Jul 06, 2023 02:40 AM GMT
Dharu

Dharu

வவுனியாவில் விருந்தினர் விடுதி ஒன்றினை முற்றுகை இட்டு இளம் பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில தெரியவருவதாவது,

வவுனியா ஏ9 வீதி மூன்று முறிப்பு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் பாலியல் தொழில் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நீதிமன்ற அனுமதி பெற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 20 வயதுடைய இளம் பெண் உட்பட நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது, பாலியல் தொழிலில் ஈடுபட்டனர் எனும் குற்றச்சாட்டில் விடுதியில் தங்கியிருந்த 20, 34 வயதுடைய இரு பெண்களும், போதைப்பொருள் பாவித்திருந்தமையுடன் விபச்சாரத்திற்கு உடந்தையாக செயற்பட்டனர் எனும் குற்றச்சாட்டில் இரு ஆண்கள் என நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் பின்னணி

வவுனியாவில் விருந்தினர் விடுதி முற்றுகை: இளம் பெண் உட்பட நால்வர் கைது | Sexual Arrest Vavuniya Girl

கைது செய்யப்பட்ட நால்வரின் மருத்துவ அறிக்கைகள் பெறப்படவுள்ளமையுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நால்வரையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

குறித்த விருந்தினர் விடுதியில் பாலியல் தொழில் பின்னனியில் முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் பின்னணியில் இயங்குகின்றமையும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW