நாட்டின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் மின்னல் எச்சரிக்கை
Galle
Matara
Sri Lankan Peoples
Weather
By Fathima
நாட்டின் சில பகுதிகளுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு, சபரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி,மாத்தறை மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின்னலினால் ஏற்படும் ஆபத்து
இன்று (05) பிற்பகல் 12.15 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, இன்று இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் என்று வானிலை ஆராய்ச்சி மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அதன்படி, பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே பொதுமக்கள் இடியுடன் கூடிய மழையின் போது மின்னலினால் ஏற்படும் ஆபத்துகளை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை ஆராய்ச்சி மத்திய நிலையம் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றது.