ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 15 பேர் பலி

United States of America Afghanistan Earthquake
By Dharu Oct 07, 2023 05:26 PM GMT
Dharu

Dharu

ஆப்கானிஸ்தானில் இன்று ஏற்பட்ட பல நிலநடுக்கங்களில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் வரை காயமடைந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) கூறியள்ளது.


அடுத்தடுத்த நிலநடுக்கங்கள்

அந்நாட்டில், ஹெராட் நகரின் வடமேற்கில் 35 கிமீ (20 மைல்) தொலைவில் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 15 பேர் பலி | Several Earthquakes Occurred In Afghanistan Today

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உதவ தயாராகி வருவதாக, ஆப்கானிஸ்தான் செஞ்சிலுவைச் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கருத்து வெளியிட்டிருந்தார்.