இன்டர்போலினால் சிவப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்ட 7 இலங்கையர்கள்

Sri Lanka Police Sri Lanka
By Fathima Jun 13, 2023 09:02 AM GMT
Fathima

Fathima

இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸாரால் சிவப்பு பட்டியலிடப்பட்டுள்ள நபர்களின் வரிசையில் 7 இலங்கையர்களின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சர்வதேச பொலிஸின் சிவப்பு பட்டியல் வரிசையில் மொத்தமாக 6872 பேரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இவ்வாறு தேடப்பட்டு வரும் பட்டியலில் நான்கு இலங்கையர்கள் இலங்கையில் தேடப்பட்டு வருவதாகவும், மூன்று இலங்கையர்கள் வெளிநாடுகளில் இழைத்த குற்றச்செயல்களுக்காக அந்தந்த நாடுகளினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய சிவப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. 

38 வயதான கொஸ்கொட சுஜி எனப்படும் சொய்சா ஜகமுனி சுஜிவ, 49 வயதான நடராஜா சிவராஜா, 50 வயதான முனுசாமி தர்மசீலன் மற்றும் 35 வயதான விக்னராசா செல்வநாதன், 52 வயதான குமாரசுவாமி நவனீதன், 61 வயதான மொஹமட் பௌமி, 41 வயதான மாணிக்கவாசகர் விஜயராஜா ஆகியோர் இவ்வாறு தேடப்பட்டு வருவோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.