மட்டக்களப்பில் தொடர் கொள்ளை; 14 வயது சிறுவன் கைது

Batticaloa Sri Lanka
By Nafeel May 10, 2023 08:39 AM GMT
Nafeel

Nafeel

 மட்டக்களப்பில் 6 வீடுகளை உடைத்து நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு - கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பனிச்சையடி பிரதேசத்தில் கடந்த முதலாம் திகதி தொடக்கம் 4 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக இந்த கொள்ளைச்சம்பவம் பதிவாகியுள்ளது.

பணம் மற்றும் நகை கொள்ளை 4 வீடுகளின் கூரை மற்றும் யன்னல் கதவுகளை உடைத்து அங்கிருந்த 4 மடி கனணி கையடக்க தொலைபேசிகள் தங்க ஆபரணங்கள் மற்றும் பெறுமதியான மின்சார உபகரணங்கள் திருட்டுபோயுள்ளது. இது தொடர்பாக கொக்குவில் பொலிஸ் நிலைய பெரும் குற்றத் தடுப்பு பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மற்றும் 25 வயதுடைய ஆண் ஒருவர் உட்பட இருவரை கைது செய்தனர். 

கைதானவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த 4 வீட்டை உடைத்தது திருடியதுடன் மட்டக்களப்பு நகர் கண்ணகையம்மன் 7 குறுக்கு வீதியிலுள்ள பூட்டியிருந்த வீடு ஒன்றை கடந்த 5 ஆம் திகதி உடைத்து அங்கிருந்து ஒரு பவுண் தங்க சங்கிலி 3 தோடுகள், கையடக்க தொலைபேசிகள் திருடியுள்ளானர். அத்துடன் பார்வீதியிலுள்ள வீடு ஒன்றில் இருந்து மரம்வெட்டும் மிசார உபகரணம் மற்றும் மின்சார உபகரணங்களை திருடியதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. திருட்டு பொருட்களை வாங்கியவர்களும் சிக்கினர் திருடிய மடிகனணிகள் தண்ணீர் மோட்டர் மற்றும் தங்க நகைகளை வாங்கிய காத்தான்குடி, சத்துருக்கொண்டான், கொக்குவில் பிரதேசங்களைச் சேர்ந்த கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் மற்றும் பழைய இருப்பு விற்பனை நிலையம், நகைக்கடை போன்ற கடை முதலாளிகள் 4 பேரை திருட்டுப் பொருளை வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்தனர்.

 கைது செய்யப்பட்வர்களை செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது திருட்டில் ஈடுபட்ட 14 வயது சிறுவன் உட்பட 2 பேரையும் 14 நாட்டகள் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். மேலும் திருட்டு பொருட்களை வாங்கிய கடை முதலாளிமார்களான 4 பேரையும் நீதவான் பிணையில் விடுவித்தார்.

Gallery