தென்கிழக்கு பல்கலைக்கழக புதிய உபவேந்தர் நியமனம்

South Eastern University of Sri Lanka Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA May 26, 2025 11:10 AM GMT

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக மருதமுனையைச் சேர்ந்த பேராசிரியர் எஸ்.எம்.ஜுனைதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் கடந்த ஓகஸ்ட் 8ஆம் திகதி முதல் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பதவி வெற்றிடமாகக் காணப்பட்டது.

சம்பூர் நில பிரச்சனை : ஆவண வெளியீட்டு நிகழ்வு

சம்பூர் நில பிரச்சனை : ஆவண வெளியீட்டு நிகழ்வு

உபவேந்தர் நியமனம்

புதிய உபவேந்தரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு கடந்த காலத்தில் நடைபெற்ற நிலையில் இப்பல்கலைக்கழகத்தின் தொழிநுட்பவியல் பீடத்தின் பீடாதிபதியான யூ.எல்.அப்துல் மஜீத் பதில் உப வேந்தராக செயற்பட்டு வந்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக புதிய உபவேந்தர் நியமனம் | Seousl New Vice Chancellor

இந்நிலையில் பேரவையின் பரிந்துரை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

பல்கலைக்கழகங்கள் சட்டத்திற்கமைவாக பேரவையினால் தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதியால் பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எஸ்.எம்.ஜுனைதீன் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக இன்று (26) முதல் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிந்தவூரில் சுகாதார பிரிவினரால் விசேட செயற்றிட்டம் முன்னெடுப்பு

நிந்தவூரில் சுகாதார பிரிவினரால் விசேட செயற்றிட்டம் முன்னெடுப்பு

நிலா வெளியில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க நடவடிக்கை முன்னெடுப்பு

நிலா வெளியில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க நடவடிக்கை முன்னெடுப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW