கிழக்கு ஆளுநர் போக்குவரத்து அமைச்சரிடம் முன்வைத்துள்ள கோரிக்கை
போக்குவரத்து மற்றும் தபால் அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிற்கும் இடையில் இன்று (17.06.2023) கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கிழக்கு மாகாணத்திற்கான தொடருந்து இணைப்பை அதிகரிப்பது குறித்தும், தொடருந்து சேவையை நவீனப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

இதேவேளை தபால் சேவையில் நியமனம் பெற்ற பெருந்தோட்ட இளைஞர்கள் அடிப்படை சம்பள விகிதத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர், அப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க கவனம் செலுத்துமாறு செந்தில் தொண்டமான் பந்துல குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
செந்தில் தொண்டமான் முன்வைத்த கோரிக்கைக்கு முன்னுரிமையின் அடிப்படையில் இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க பந்துல குணவர்தன ஒப்புக்கொண்டதுடன், அவரது வாழ்க்கை வரலாறு புத்தகத்தையும் கையளித்துள்ளார்.