இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் மாணிக்கவாசகம் காலமானார்
Vavuniya
Death
By Fathima
இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும் ரொய்ட்டர்ஸ், BBC, வீரகேசரியின் ஊடகவியலாளருமான பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியை வவுனியா வைரவபுளியங்குளம் 10 ஆம் ஒழுங்கையின் உள்ள அவரது இல்லத்தில் நாளை (13) 7 மணிக்கு நடைபெறும் என உறவினர்கள் அறிவித்துள்ளனர்.
பல் பரிமாணங்களை கொண்ட இவர் கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள், நூல்கள் என்பவற்றையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

யுத்த காலத்தின் தமிழ் மண்ணின் அவலங்களை உலகறியச் செய்த ஊடகவியலாளர்களில் இவர் முக்கியமானவராக திகழ்கிறார்.
யாழ் ஊடக அமையம் 2019ம் ஆண்டு மயில்வாகனம் நிமலராஜன் ஞாபகர்த்தமான நெருக்கடியான சூழலில் அறிக்கையிடல் பணிக்கான விருதை இவருக்கு வழங்கி கௌரவித்திருந்தது.