ஈகைப் பெருநாளை முன்னிட்டு பள்ளிவாசல்களில் பாதுகாப்பு வேலைத்திட்டம்
Sri Lanka Police
Sri Lankan Peoples
Mosque
By Thahir
ஈகைப் பெருநாளை முன்னிட்டு பள்ளிவாசல்கள் தொடர்பில் பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு வேலைத்திட்டம்
முஸ்லிம்கள் செறிவாக வாழும் மாகாணங்களில் இந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.