மீன்பிடிக்கச் சென்று முதலையிடம் சிக்கிய பெண்ணை தேடும் பணி தீவிரம்

Ampara Climate Change Weather Women
By Rakshana MA Oct 16, 2024 10:05 AM GMT
Rakshana MA

Rakshana MA

கல்முனையில் மீன் பிடிக்கச்சென்று காணாமல் போன பெண்ணை தேடும் பணியை பொலிஸார் மற்றும் கல்முனை கடற்படை முகாம் அதிகாரிகள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

மீன் பிடிப்பதற்காக சென்ற பெண்ணை முதலை இழுத்து சென்ற சம்பவம் ஒன்று திங்கட்கிழமை (14) மாலை பதிவாகி இருந்தது.

ஹரீஸ் தேர்தலில் வேட்பாளராக முடியாது! கல்முனை மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் கூறும் விடயம்

ஹரீஸ் தேர்தலில் வேட்பாளராக முடியாது! கல்முனை மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் கூறும் விடயம்

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிட்டங்கி ஆற்றை அண்டிய பிரதேசமான சொறிக் கல்முனை புட்டியாறு பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த பெண்ணே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீன்பிடிக்கச் சென்று முதலையிடம் சிக்கிய பெண்ணை தேடும் பணி தீவிரம் | Search For Woman Caught By Crocodile While Fishing

சொறிக் கல்முனையைச் சேர்ந்த 58 வயதான ஞானபிரகாசம் டூரியநாயகி எனும் திருமணமாகாத பெண் இந்த சம்பவத்தில் காணாமல் போயுள்ளதுடன் இதுவரை அப்பெண்ணோ அல்லது பெண்ணின் சடலமோ மீட்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தீவிரமான தேடுதல் பணி 

பெண்ணை தேடும் நடவடிக்கையில் சவளக்கடை பொலிஸாருடன் இணைந்து கல்முனை கடற்படையினரின் படகும் சுழியோடிகளும் ஈடுபட்டுள்ளதுடன், பொதுமக்களும் இந்நடவடிக்கைகளுக்கு உதவி வருகின்றனர்.

மேலும், இப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக ஆறுகளில் நீர் அதிகரித்துள்ளமை ஆபத்தான நிகழ்வுகள் நடக்கலாம் எனவும் கருதப்படுகின்றது..

மீன்பிடிக்கச் சென்று முதலையிடம் சிக்கிய பெண்ணை தேடும் பணி தீவிரம் | Search For Woman Caught By Crocodile While Fishing

மக்களின் கோரிக்கை

காரைதீவு - மாவடிப்பள்ளி நீர் ஓடையில் வழமையாக முதலைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இவைகளும் மழை வெள்ளத்துடன் கிட்டங்கி ஆறு உட்பட பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன.

இவ்வாறு முதலை நடமாட்டம் உள்ள இடங்கள் மற்றும் அபாயகரமான பிரதேசங்களில் பிரதேச சபைகள் சுற்றுச் சூழல் அதிகாரிகள் வன பரிபாலன சபையினர், பொதுமக்களுக்கு தெளிவூட்டும் வகையில் எச்சரிக்கை பலகைகளை காட்சிப்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அம்பாறையில் சீரற்ற காலநிலையால் மக்கள் பாதிப்பு

அம்பாறையில் சீரற்ற காலநிலையால் மக்கள் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGallery