தமிழ்நாட்டின் நெல்லையில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் 15ஆண்டு நிறைவு விழா
எஸ்டிபிஐ கட்சியின் 15ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்றையதினம்(21.06.2023) தமிழ்நாட்டின் நெல்லையில் நிகழ்வொன்று ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு கொடியேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார்.
இதன் போது கருத்து தெரிவித்த மாநில தலைவர் நெல்லை முபாரக்,
இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை ஒதுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களின் மனதில் அரசியல் அதிகாரம் பற்றிய முழுமையான விழிப்புணர்வை நமது 'நேர்மறை அரசியல்' உருவாக்கியுள்ளது.
பசியிலிருந்து விடுதலை, பயத்திலிருந்து விடுதலை
மக்கள் துயரத்தில் இருக்கும் போதெல்லாம் எஸ்.டி.பி.ஐ. எப்போதும் மக்களின் சேவையில் இருக்கும். கொரோனா பெருந்தொற்றின் போது நம்முடைய அர்ப்பணிப்பு மற்றும் ஈடு இணையற்ற மனிதாபிமான சேவை எப்போதும் மறக்க முடியாதது.
நாம் எப்போதும் மக்கள் சேவகராக இருப்போம், மக்கள் தேவைகள் மற்றும் மக்கள் அரசியலுக்கான போராட்டத்தில் முன்னணியில் இருப்போம்.
உற்சாகத்துடனும், புகழுடனும் நம்முடைய பாதையில் வெற்றி பெறுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நமது கட்சியின் நோக்கமான ‘பசியிலிருந்து விடுதலை, பயத்திலிருந்து விடுதலை’ என்பதை உணர்ந்து உறுதியுடனும், அர்ப்பணிப்புடனும் முன்னேற வேண்டும் என கட்சித் தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன்.''என தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் நெல்லை மாநகர் மாவட்டம் பாளை மற்றும் நெல்லை தொகுதிக்கு உட்பட்ட சுத்தமல்லி, பேட்டை, பாளை, மேலப்பாளையம்,மானூர், தாழையூத்து, பர்கிட்மாநகரம், சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கட்சி நிகழ்வுகள் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.