மின்னல் தாக்கி பாடசாலை மாணவன் மரணம்
Kalutara
Death
Sri Lankan Schools
By Fathima
களுத்துறை, ஹொரணை – அங்குருவாதொட்ட பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (22.11.2023) இடம்பெற்றுள்ளது.
இந்த அனர்த்தத்தில் 15 வயதுடைய மாணவனே பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சீரற்ற காலநிலையால் பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் 5 மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |