பாடசாலை பாட நேரங்களில் ஏற்படப்போகும் மாற்றம்

Sri Lankan Peoples School Children schools
By Rakshana MA Jul 14, 2025 08:30 AM GMT
Rakshana MA

Rakshana MA

பாடசாலை பாட வேளைகள் எட்டிலிருந்து ஏழாக குறைக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த தீர்மானமானது, எதிர்வரும் வருடம் ஜனவரி முதாலம் திகதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, ஒவ்வொரு பாட வேளையும் 50 நிமிடங்களாக திருத்தப்படும் என்றும், அதற்கேற்ப அனைத்து வகுப்பறை நேர அட்டவணைகளும் மறுசீரமைக்கப்படும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

கிழக்கில் மற்றுமொரு ஊடகவியலாளர் மீது தாக்குதல்!

கிழக்கில் மற்றுமொரு ஊடகவியலாளர் மீது தாக்குதல்!

நேர குறைப்பு...

அத்தோடு, கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவனம் மற்றும் மாகாண சபைகளுடன் இணைந்து, இந்த ஆண்டு 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு 100,000 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை பாட நேரங்களில் ஏற்படப்போகும் மாற்றம் | School Periods Reduced To Seven In Srilanka

இந்த நிலையில், கல்வி சீர்திருத்த செயல்முறை 2026 ஜனவரி 1 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளை மையமாகக் கொண்டு தொடங்கப்படும்.

சமீபத்தில் வட மத்திய மாகாண சபையில் நடைபெற்ற புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து மாகாண, மண்டல மற்றும் பிரதேச மட்டங்களில் உள்ள கல்வி மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்குத் தெரிவிக்கும் தொடர் கலந்துரையாடல்களின் முதல் அமர்வின் போது நாலக கலுவெவ இதை வெளிப்படுத்தினார்.

சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

முறையற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை! வெளியாகும் புதிய நடைமுறை

முறையற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை! வெளியாகும் புதிய நடைமுறை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW