மரத்தின் கிளை முறிந்து விழுந்து மாணவன் பலி

By Fathima Feb 06, 2024 06:57 AM GMT
Fathima

Fathima

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நியூட்டன் தோட்டப் பகுதியில் மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளை முறிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த சிறுவன் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நியூட்டன் தோட்டம், டிக்கோயா பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.

விளக்கமறியல்

உயிரிழந்த சிறுவன் தோட்டத்தின் நடுவில் நடந்து சென்றபோது, ​​தோட்டத்தின் மேல் பகுதியில் உள்ள மரத்தை சிலர் வெட்டியுள்ளனர்.

மரத்தின் கிளை முறிந்து விழுந்து மாணவன் பலி | School Boy Death In Norwood

வெட்டப்பட்ட மரம் மற்றுமொரு மரத்துடன் மோதியதில் அந்த மரத்தின் கிளை முறிந்து சிறுவன் மீது விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மரத்தை வெட்டிய 5 சந்தேக நபர்களை நோர்வூட் பொலிஸார் கைது செய்த நிலையில், சந்தேகநபர்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.