கொழும்பை உலுக்கிய மாணவன், மாணவியின் மரணம்: விசாரணையில் வெளியான உண்மை

Sri Lanka Police Sri Lanka Crime Branch Criminal Investigation Department
By Raghav Jul 05, 2024 06:45 AM GMT
Raghav

Raghav

கொம்பனித்தெருவில் (Slave Island) உள்ள அல்டெயார் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த மாணவி உயரமான இடங்களில் புகைப்படம் எடுப்பதில் நாட்டம் கொண்டுள்ளவர் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

மேலதிக விசாரணைகள் கொம்பனித் தெரு காவல் நிலைய பொறுப்பதிகாரி கபில விஜேமான்ன (Kapila Wijemanna) தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் உயிரிழந்த 15 வயது மாணவன் மற்றும் மாணவியின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் விசாரணை

குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பில் (colombo) உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் இருவரே உயிரிழந்துள்ளனர்.

கொழும்பை உலுக்கிய மாணவன், மாணவியின் மரணம்: விசாரணையில் வெளியான உண்மை | School Boy And Girl Jump 67 Floor Altair Apartment

அவர்களின் சடலங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் 03வது மாடியில் குளிரூட்டிகள் பொருத்தப்பட்டுள்ள இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டதுடன், இயந்திரங்களில் விழுந்துள்ளதாக உடல்கள் சிதைவடைந்திருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாணவனும் மாணவியும் நெருங்கிய நண்பர்கள் என காவல்துறையினர் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மேலும், குறித்த மாணவி உயரமான இடங்களில் புகைப்படம் எடுப்பதில் நாட்டம் கொண்டுள்ள நிலையில், அவரது கைப்பேசியில் இதுபோன்ற பல புகைப்படங்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

 வாக்குவாதம்

அதன்படி, அவ்வாறான புகைப்படங்களை எடுக்க முற்பட்ட போது இருவரும் 67வது மாடியில் இருந்து கீழே விழுந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறாயினும், விபத்து ஏற்படுவதற்கு முன்னர் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் நிலவுவதாக விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பை உலுக்கிய மாணவன், மாணவியின் மரணம்: விசாரணையில் வெளியான உண்மை | School Boy And Girl Jump 67 Floor Altair Apartment

அல்டெயார் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பிற்கு செல்வதற்கு அங்கு வசித்த அவர்களது நெருங்கிய நண்பர் ஒருவரால் அனுமதி வழங்கப்பட்டது. அந்த நண்பர் காரணமாக மாணவன் மற்றும் மாணவி அடிக்கடி குடியிருப்புத் தொகுதிக்கு வந்து செல்லும் நிலையில், அன்றைய தினம் அங்கு வருவதை பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை என காவல்துறையினர் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதிகாரிகளின் கவனம் 

மகள் வீட்டிற்கு வர தாமதமானதால், அவரது தந்தை மாணவனுக்கு அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் அவர் தன்னுடன் இல்லை என்று கூறியுள்ளார்.

கொழும்பை உலுக்கிய மாணவன், மாணவியின் மரணம்: விசாரணையில் வெளியான உண்மை | School Boy And Girl Jump 67 Floor Altair Apartment

எனினும் இது தொடர்பில் காவல்துறையினருக்கு அறிவிக்கப்படும் என குறித்த மாணவியின் தந்தை கூறியதையடுத்து எழுந்த அச்சம் காரணமாக இருவரும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்தார்களா என்பது தொடர்பிலும் விசாரணை அதிகாரிகளின் கவனம் செலுத்தியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக மாணவன் மற்றும் மாணவியின் கைப்பேசிகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை, சம்பவத்தன்று மாணவி பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக வெளியான செய்திகள் பொய்யானவை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW