அடுத்த மாதம் முதல் வழங்கப்படவுள்ள புலமைப்பரிசில் நிதியம்

Ranil Wickremesinghe Sri Lanka Education
By Rukshy Apr 08, 2024 07:27 AM GMT
Rukshy

Rukshy

 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த (2022/2023) பொருளாதார சிரமங்களுக்கு முகங்கொடுக்கும் 6000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதோடு நிலுவைத் தொகையை இந்த வருடம் மே மாதம் முதல் வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி நிதியம் அறிவித்துள்ளது.

இதன்படி, மார்ச் 2024 முதல் அமுலுக்கு வரும் வகையில் மாதாந்தம் 6000 ரூபா வீதம் 24 தவணைகளுக்கு இந்த புலமைப்பரிசில் தொகை வழங்கப்படவுள்ளது.

கொடுப்பனவு 

தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல்கள் ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.presidentsfund.gov.lk) அடுத்த சில நாட்களில் வெளியிடப்படவுள்ளதோடு மேலதிக விபரங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தை (www.facebook com/president.fund) அணுகுமாறு ஜனாதிபதி நிதியம் தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் முதல் வழங்கப்படவுள்ள புலமைப்பரிசில் நிதியம் | Scholarship Fund To Be Awarded From Next Month

தரம் 1 முதல் தரம் 11 வரை பொருளாதார சிரமங்களுக்கு உள்ளான ஒரு இலட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டத்துக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது தற்போது முடிவடைந்துள்ளதுடன், புலமைப்பரிசில் பெறத் தகுதியானோரின் பட்டியல் எதிர்வரும் நாட்களில் வலய மட்டத்தின் ஊடாக ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கவுள்ளது.

இந்தப் பட்டியல்களைப் பெற்ற பின்னர், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபாய் வீதம் 12 மாதங்கள் புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மேலும், இந்தப் புலமைப்பரிசில் தொகையும் இந்த வருட மே மாதம் முதல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக் தெரிவிக்கப்பட்டுள்ளது