புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு

Department of Examinations Sri Lanka Grade 05 Scholarship examination Sri Lankan Schools
By Laksi Jan 10, 2025 06:26 AM GMT
Laksi

Laksi

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகும் காலம் தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர(Amith Jayasundara) வெளியிட்டுள்ளார்.

அதன்படி, குறித்த பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம்  10 ஆம் திகதிக்கும் 12 ஆம் திகதிக்கும் இடையில் வெளியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, விடைத்தாள் திருத்தும் செயல்முறை ஜனவரி  (08)ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.

இன வன்முறையை தூண்டுவோருக்கு சிறைத்தண்டனை: பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை

இன வன்முறையை தூண்டுவோருக்கு சிறைத்தண்டனை: பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை

வினாத்தாள் கசிவு

2024ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்றது.

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு | Scholarship Exam Results Announced To Be Released

244,092 மாணவர்கள் சிங்கள மொழி மூலமும், 79,787 மாணவர்கள் தமிழ் மொழி மூலமும் என மொத்தம் 323,879 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

முன்னதாக இந்த பரீட்சை வினாத்தாளில் மூன்று வினாக்கள் வெளியில் கசிந்தமை தொடர்பில் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், இது தொடர்பில் பெற்றோர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் விமர்சனம் வெளியிட்டு போராட்டங்களை நடத்தியிருந்ததுடன், நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

நாடாளுமன்ற ஒன்றியத்தின் துணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு

நாடாளுமன்ற ஒன்றியத்தின் துணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு

சொகுசுப் பேருந்துகள் மீண்டும் விமான நிலையம் செல்ல அனுமதி

சொகுசுப் பேருந்துகள் மீண்டும் விமான நிலையம் செல்ல அனுமதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW