புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் : பிரத்தியேக வகுப்பாசிரியர் கைது
நடைபெற்று முடிந்த தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு வந்த பிரத்தியேக வகுப்பாசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பிரத்தியேக வகுப்பாசிரியர் சட்டத்தரணி ஊடாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நேற்று (24) முன்னிலையான போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் குருநாகல் பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடைய பிரத்தியேக வகுப்பாசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதல் வினாத்தாள் வெளியானது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக திணைக்களத்தினால் புலனாய்வுக் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்ததுடன், கடந்த சில நாட்களாக சந்தேகநபரை தேடி வருகின்றனர்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் திணைக்கள பணிப்பாளர் முன்னதாக கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |