இலங்கைக்கு உதவியளிக்க இந்தியா - பாகிஸ்தான் இணக்கம்

Sri Lanka Pakistan India
By Raghav Jul 13, 2024 05:24 AM GMT
Raghav

Raghav

இலங்கையில் பசும்பால் உற்பத்தித்தொழிலை மேம்படுத்துவதற்காக பசுக்களை வழங்குவதற்கு இந்தியாவும் (India) பாகிஸ்தானும் (Pakistan) இராஜதந்திர மட்டத்தில் இணக்கம் தெரிவித்துள்ளன.

நாட்டில் பசும்பால் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் அதிகளவான பாலை பெறக்கூடிய பசுக்கள் இல்லாதது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் காலநிலை

இதனால், இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையின் நடத்தியதற்கிணங்க, இந்தியா சாஹிவால் என்ற பசு மாடுகளையும், பாகிஸ்தான் முரா என்ற வகை எருமை மாடுகளையும் நாட்டுக்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு உதவியளிக்க இந்தியா - பாகிஸ்தான் இணக்கம் | Scheme To Improve Cow Milk Production In Srilanka

நாட்டின் காலநிலைக்கு ஏற்ற பசுக்கள் மற்றும் எருமைகள் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மட்டுமே காணப்படுகின்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, சில ஆண்டுகளுக்கு முன்பு, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் (Australia) இருந்து பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டாலும், அந்த திட்டங்கள் தோல்வியடைந்துள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW