சவுதி பாதுகாப்பு படை பெண் பாதுகாவலரின் மனிதாபிமான செயல்!
சூடான் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட பெண்னொருவரின் குழந்தையை சவுதி பாதுகாப்புப் படை பெண் பாதுகாவலர் துறைமுகத்திலிருந்து பாதுகாப்புடன் மீட்டுள்ளார்.
கடந்த (15.05.2023) அன்று சுமார் 200 சவுதி மக்கள் மற்றும் வெளிநாட்டினரை ஏற்றி வந்த, HMS Yanbu கப்பல் ஜித்தா துறைமுகம் வந்தடைந்துள்ளது.
மனிதாபிமான செயல்
இதன்போது அதில் பயணம் செய்து வந்த போரால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணினுடைய குழந்தையை சவுதி பாதுகாப்புப்படை பெண் பாதுகாவலர் முழுமையாக அரவணைத்து இறக்கி கொண்டு வந்துள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்ட அந்த காணொளி மூலம் குறித்த பெண் பாதுகாவலர் பாராட்டுக்களை பெற்று வருகின்றார்.
மேலும், இந்த பாதுகாப்பு படை பெண் வீரரின் இச்செயல் மனிதாபிமானத்தின் அடையாளமாக பார்க்கப்படுவதாக அமைகின்றது.