இலங்கை அமைச்சர் நஸீர் அஹமட் சவூதி நாடாளுமன்ற நட்புறவுச்சங்க தலைவராக தெரிவு(Photos)

Sri Lanka Politician Naseer Ahamed Saudi Arabia
By Fathima May 11, 2023 05:44 AM GMT
Fathima

Fathima

இலங்கை-சவூதி நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத் தலைவராக சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த பதவிக்கு இவர் தெரிவாகியுள்ளமை இருதரப்பு உறவுகளை மேம்படுத்துமென நம்பப்படுகிறது.

இதற்கமைய சவூதி அரேபியாவின் மன்னர் பஹட் பெட்ரோலியம் மற்றும் கனியவளப் பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்ற இவர், அந்நாட்டுடன் நெருக்கமான உறவிலும் உள்ளார்.

இலங்கை அமைச்சர் நஸீர் அஹமட் சவூதி நாடாளுமன்ற நட்புறவுச்சங்க தலைவராக தெரிவு(Photos) | Saudi Parliment Selected As The Minister Nazir

அரபு நாடுகளின் ஒத்துழைப்பு

இதேவேளை முன்னணி எரிபொருள் நிறுவனங்களின் தலைவர்கள் பலர், அமைச்சருடன் பல்கலைக்கழகத்தில் பயின்ற சக நண்பர்களாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அரபுமொழியில் பாண்டித்தியம், ஹாபிழுமான அமைச்சர் நஸீர் அஹமடின் பாண்டித்தியம் இலங்கை முஸ்லிம்களின் கலாசார அபிலாஷைகளை அடைந்துகொள்ள உதவுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அமைச்சர் நஸீர் அஹமட் சவூதி நாடாளுமன்ற நட்புறவுச்சங்க தலைவராக தெரிவு(Photos) | Saudi Parliment Selected As The Minister Nazir

இலங்கையின் பொருளாதார மேம்பாடுகளுக்கு சவூதியுட்பட அரபு நாடுகளின் ஒத்துழைப்பை பெறவும் இவரது தெரிவு வழிகோலாக அமைந்துள்ளது.

மேலும், காலநிலை சவால்களை எதிர்கொள்ளும் பக்குவம் மற்றும் உள்நாட்டுக் கனிய வளங்களை சர்வதேச சந்தைப்படுத்தும் வியாபார வியூகங்கள் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

GalleryGalleryGalleryGallery