மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகள் பேருந்து விபத்து! 42 பேர் பலி

Saudi Arabia Accident World
By Shalini Balachandran Nov 17, 2025 07:08 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

சவுதி அரேபியா மதீனா அருகே மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று டீசல் தாங்கியுடன் மோதிய, குறித்த விபத்தில் சிக்கி 42 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இறந்தவர்களில் பலர் இந்தியர்கள் என சவுதி அரேபியா ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

புனிதப்பயணம் 

முஃப்ரிஹாத் அருகே அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து நடந்தபோது, ​​பேருந்து மக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகள் பேருந்து விபத்து! 42 பேர் பலி | Saudi Bus Crash 42 Pilgrims Feared Dead

பலியானவர்களில் குறைந்தது 11 பெண்களும் மற்றும் பத்து குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.