சவுதி அரேபியாவில் கடுமையாகும் சட்டம்: பெற்றோருக்கு சிறை தண்டனை வழங்க தீர்மானம்

Saudi Arabia Education
By Fathima Aug 27, 2023 10:04 PM GMT
Fathima

Fathima

சவுதி அரேபியாவில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகை வீதங்கள் தொடர்பான சட்டங்களை அந்நாட்டின் அரசு கடுமையாக்கி உள்ளது.

அதன்படி, சவுதி அரேபியாவில் மாணவர்கள் முறையான காரணம் இன்றி 20 நாட்களுக்கு மேல் பாடசாலைக்கு விடுமுறை எடுத்தால் பெற்றோருக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இதில், பெற்றோர்கள் கைதாகும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் கடுமையாகும் சட்டம்: பெற்றோருக்கு சிறை தண்டனை வழங்க தீர்மானம் | Saudi Arabia Tightens School Attendance Rules

 கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கம்

இந்த கடும் நடவடிக்கை நாட்டின் சிறுவர் பாதுகாப்புச் சட்டத்திற்கு ஏற்றதாகவும், எதிர்வரும் கல்வியாண்டில் கல்வியின் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டதாகவும் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கைகளின்படி, "ஒரு மாணவர் 20 நாட்களுக்கு ஒரு முறையான காரணமின்றி பாடசாலைக்கு வராமல் இருந்தால், அவர்களின் பாதுகாவலர் நாட்டின் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பொது வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படலாம்.

விசாரணை முடிந்ததும், வழக்கு நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும். மாணவர் நீண்ட காலமாக இல்லாதது குறித்து பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கவனக்குறைவு ஏற்பட்டால், அதற்குரிய சிறைத்தண்டனை விதிக்க நீதிபதிக்கு அதிகாரம் உள்ளது.

நெருங்கி வரும் கல்வியாண்டிற்கான உகந்த கற்றல் சூழல் அல்லது "சிறந்த ஆய்வுகளை" மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW