விசா விதிகளை மாற்றியுள்ள சவூதி அரேபியா

Saudi Arabia World Visa-Free Entry
By Rakshana MA Feb 10, 2025 07:45 AM GMT
Rakshana MA

Rakshana MA

14 நாடுகளுக்கான விசா விதிகளை சவூதி அரேபியா மாற்றியுள்ளது.

இதன்படி குறிப்பிட்ட இந்த 14 நாடுகளுக்கும் ஒரே முறை பயணிக்கக்கூடிய Single-Entry Visa மட்டுமே வழங்க முடிவு செய்துள்ளது.

இந்த மாற்றம் 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

விசா விதிகள்

இதன்படி, இந்தியா உட்பட பாகிஸ்தான், எகிப்து, இந்தோனேசியா, எத்தியோப்பியா, அல்ஜீரியா, நைஜீரியா, ஈராக், ஜோர்டான், மொரோக்கோ, சுடான், துனீசியா, ஏமன் ஆகிய நாடுகளும் இந்த கட்டுப்பாட்டில் அடங்குகின்றன.

சவூதி அதிகாரிகள், அனுமதியின்றி ஹஜ் பயணம் செய்வதை கட்டுப்படுத்த இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.

அத்துடன், பயணிகளுக்கு 30 நாட்கள் மட்டுமே செல்ல அனுமதி என்பதுடன், 2024இல், அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படாத ஹஜ் பயணிகள் காரணமாக, கூட்ட நெரிசல் மற்றும் வெப்பத்தால் 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

விசா விதிகளை மாற்றியுள்ள சவூதி அரேபியா | Saudi Arabia Changes Visa Rules For Other Country

இந்த கட்டுப்பாடு தற்காலிகமானது என்றாலும், மீண்டும் எப்போது மாற்றப்படும் என்பது தெரியவில்லை. பயணிகள் முன்கூட்டியே விசா விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், விசா நீடிப்பு அல்லது பல முறை பயணிக்க அனுமதி இல்லை. இது சுற்றுலா, தொழில் மற்றும் குடும்ப சந்திப்பு விசாக்களுக்கும் பொருந்தும்.

மேலும், ஹஜ், உம்ரா, தூதரகம் மற்றும் குடியுரிமை விசாக்களுக்கு மாற்றம் இல்லை. சவூதி அதிகாரிகள், அனுமதியின்றி ஹஜ் பயணம் செய்வதை கட்டுப்படுத்த இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிவாயு விலை குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு

எரிவாயு விலை குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு

அரசாங்கத்தின் எதிரியாக மாறியுள்ள குரங்குகள்

அரசாங்கத்தின் எதிரியாக மாறியுள்ள குரங்குகள்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW