கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்பில் சவுதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

Saudi Arabia Crude Oil Prices Today Dollars
By Fathima Jun 05, 2023 10:48 PM GMT
Fathima

Fathima

கச்சா எண்ணெய் உற்பத்தியை, குறைக்க போவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. அரேபியாவின் எரிசக்தி அமைச்சரான இளவரசர் அப்துல் அசீஸ் பின் சல்மான் இதனை அறிவித்துள்ளார்.

இதற்கமைய நாளொன்றுக்கு 10 லட்சம் பீப்பாய் என்ற அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியை, குறைக்க போவதாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே நாளாந்தம் 2 மில்லியன் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி ஏப்ரலில் அறிவிக்கப்பட்டு மே மாதம் முதல் குறைக்கப்பட்டுள்ளது.

பீப்பாய் கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்பில் சவுதி வெளியிட்டுள்ள அறிவிப்பு | Saudi Announcement Regarding Crude Oil Production

இது தொடர்பாக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் ஓபெக் கூட்டமைப்பு ஏழு மணி நேரம் சவுதி அரேபியா அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதனையடுத்து எண்ணெய் உற்பத்தியை மேலும் குறைக்க உடன்பாடு ஏற்பட்டதாக சவுதி அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை ஒரு அமெரிக்க டொலருக்கு மேல் அதிகரித்துள்ளது.

ப்ரெண்ட் கச்சா எண்ணெ பீப்பாய் ஒன்றின் விலை 77.64 அமெரிக்க டொலராக காணப்படும் நிலையில், எதிர்காலத்தில் 1.51 அமெரிக்க டொலரிலோ அல்லது 2% இல் அதிகரிக்கும் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.