சதொச நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கட்டாய பணிநீக்கம்

Government Employee Sri Lanka Cabinet Lanka Sathosa Nalin Fernando employee provident fund
By Fathima Sep 17, 2023 08:41 AM GMT
Fathima

Fathima

சதொச நிறுவனத்தில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை கட்டாய பணி நீக்கம் செய்ய அமைச்சரவையில் அனுமதி கிடைத்துள்ளதாக சதொச பணிப்பாளர் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி சதொசவில் பணியாற்றிய 292 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ள நிலையில், குறித்த முடிவுக்கு  ஊழியர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சதொச நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கட்டாய பணிநீக்கம் | Sathosa Terminating Employees From Next Mnths

சட்ட ரீதியான நடவடிக்கை 

மேலும் தெரிய வருகையில், சதொச மறுசீரமைப்பின் கீழ் இம்மாதம் 30 ஆம் திகதிக்குள் 300 ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுப்பதற்கு சதொச பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது.

வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ அமைச்சரவையில் சமர்ப்பித்த பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதால் சதொச நிர்வாகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

சதொச நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கட்டாய பணிநீக்கம் | Sathosa Terminating Employees From Next Mnths

சதொச நிறுவனத்தின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், இந்த கட்டாய ஓய்வு பிரேரணையின் பிரகாரம் ஊழியர்களுக்கு செப்டெம்பர் மாதம் சம்பளம் வழங்கியதன் பின்னர், எதிர்வரும் 30ஆம் திகதி முதல் மாதாந்த சம்பளம் அல்லது வேறு கொடுப்பனவுகள் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைச்சின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சதொச ஊழியர்கள் அடுத்த வாரம் முதல் தொழில் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.