குறைந்த விலையில் பொருட்களை வழங்க தயாராகும் சதொச நிறுவனம்

Sri Lankan Peoples Lanka Sathosa Value Added Tax​ (VAT)
By Benat Jan 17, 2024 07:12 AM GMT
Benat

Benat

வற் வரி பதினெட்டு சதவீதமான அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் சில பொருட்களின் விலையை அதிகரிக்காமல் இருக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

வற் வரி அதிகரிப்பின் காரணமாக சந்தையில் பாரியளவில் அதியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

குறைந்த விலையில் பொருட்கள் 

இந்தநிலையில், நாடளாவிய ரீதியில் உள்ள சதொச கிளைகளில் குறித்த பொருட்களை வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும் என சதொச நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

குறைந்த விலையில் பொருட்களை வழங்க தயாராகும் சதொச நிறுவனம் | Sathosa Food Price

சவர்க்காரம் , வாசனை திரவியங்கள் , முகப்பூச்சு மற்றும் சிறு குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் ஆகியவற்றை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW