சாந்தன் காலமானார்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்.
சாந்தன் தனது 72ம் வயதில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ராஜீவ் காந்தி வைத்தியசாலையில் சாந்தன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
32 ஆண்டுகளின் பின்னது தனது தாயாரை பார்வையிடுவதற்காக அவர் தாயகம் திரும்பத் திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், அவர் நாடு திரும்ப இருந்த நிலையில் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார்.
சாந்தனின் தாயார் இந்திய அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய சாந்தன் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு சாந்தனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், காலை 7.50 மணியளவில் சாந்தனின் உயிர் பிரிந்ததாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2022 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.