சனத் நிசாந்தவின் சாரதி கைது
வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் குறித்த வாகனத்தின் சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சனத் நிசாந்தவின் வாகன சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெலிசறை நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
கொள்கலன் வண்டிச் சாரதி விடுதலை

இதேவேளை, இந்த விபத்துடன் தொடர்புடைய கொள்கலன் வண்டியின் சாரதியை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் பயணம் செய்த வாகனம் மிக வேகமாக பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.