இன்று சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள்
கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளன.
இன்று பிற்பகல் 01.00 மணியளவில் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் உள்ள அமைச்சரின் இல்லத்தில் இறுதிக்கிரியைகள் ஆரம்பமாகவுள்ளன.
இறுதி அஞ்சலி
இராஜாங்க அமைச்சரின் பூதவுடல் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு அருகில் உள்ள தற்காலிக மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிற்பகல் 01.00 மணி வரை இறுதி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
இறுதிச் சடங்குகளின் பின்னர், உடல் ஊர்வலமாக ராஜகதலுவ கத்தோலிக்க மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுடவுள்ளது.
விபத்தில் உயிரிழந்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் உடல் கண்டி – ஹதெனிய – மரவணாகொட பொது மயானத்தில் நேற்று பிற்பகல் நல்லடக்கம் செய்யப்பட்டது.