சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம்: பாரவூர்தியின் சாரதி வாக்குமூலம்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், கொள்கலன் பாரவூர்தியின் சாரதி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு (12) புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
உயிரிழந்த முன்னாள் அமைச்சரின் மனைவியான சட்டத்தரணி சாமரி பிரியங்கா, தனது கணவரின் மரணம் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகக் கூறி கடந்த (7) செய்த முறைப்பாடு தொடர்பில் இந்த வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர்.
இதன்போது அவரிடம் சுமார் 5 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப்பில் மோதியதாகக் கூறப்படும் கொள்கலன் சாரதி சட்டத்தரணி ஒருவருடன் வந்து 5 மணிநேரம் வாக்குமூலம் வழங்கினார்.