போராட்டக்காரர்களால் தீயிட்டு எரிக்கப்பட்ட சனத் நிஷாந்தவின் இல்லம்:பிரசன்ன ரணதுங்க வெளியிட்ட தகவல்

Prasanna Ranatunga Sanath Nishantha Accident Sanath Nishantha
By Dhayani Jan 26, 2024 02:06 PM GMT
Dhayani

Dhayani

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, புத்தளத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு வீடு இல்லாத காரணத்தினால், விபத்து இடம்பெற்ற அன்று இரவு கொழும்புக்கு வந்ததாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 இராஜாங்க அமைச்சரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மே 9 போராட்டத்தின் போது புத்தளத்தில் உள்ள சனத் நிசாந்தவின் உத்தியோகபூர்வ இல்லம் எரிக்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் புத்தளத்தில் ஓய்வெடுக்க வீடு இல்லாத நிலையில் நேற்றைய தினம் அவர் கொழும்புக்கு திரும்பிக் கொண்டிருந்த போதே விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.