சனத் நிஷாந்தவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த சந்தர்ப்பம்
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று (25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில், இராஜாங்க அமைச்சரின் பூதவுடல் இன்று (26) புத்தளம் இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் ஹலவத்தையில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கொழும்பு திரும்பும் போது சனத் நிஷாந்த பயணித்த சொகுசு ஜீப் வாகனம் நேற்று அதிகாலை இரண்டு மணியளவில் கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் விபத்திற்குள்ளானது.
இறுதி அஞ்சலி
இந்த விபத்தில் இராஜாங்க அமைச்சர், அவரது பாதுகாப்பு அதிகாரி மற்றும் வாகனத்தின் சாரதி ஆகியோர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து இராஜாங்க அமைச்சரின் சடலம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு பூதவுடல் இன்று முற்பகல் 10.30 மணியளவில் புத்தளத்தில் உள்ள வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |