ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்க வேண்டும்: சாணக்கியன் கோரிக்கை

By Madheeha_Naz Jan 12, 2024 09:24 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார மீள்கட்டமைப்பிற்கான ஆயுதங்களை இந்தியா தமிழர் தாயகத்திற்கு வழங்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைக்காக தொடர்ந்து போராடிவரும் தாம் தமிழக முதல்வரிடமும் அரசியல் பிரமுகர்களிடமும் மேற்படி கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சென்னை வர்த்தக மையத்தில் இடம்பெற்ற அயலக தமிழர் தின விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் அபிலாசை மற்றும் உரிமை

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்க வேண்டும்: சாணக்கியன் கோரிக்கை | Sanakiyan Rasamanikam Request India Provide Arms  

இந்தியா மற்றும் தமிழகத்தின் சிறந்த ஆயுதமான பொருளாதரத்தை வைத்துக்கொண்டு ஈழத் தமிழர்களான எங்களுக்கு நிம்மதியான சிறந்த எதிர்காலத்தையும் தமது மக்களின் அபிலாசைகள் மற்றும் உரிமைகளைப் பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொருளாதாரம் என்னும் ஆயுதம் எதிர்காலத்தில் தமிழர்களின் இருப்பினை வலுப்பெறச்செய்வதற்கான வழியமைத்துக் கொடுக்கும்.

எனவே விடுதலைப் போராட்டத்திற்கு முன்னர் ஈழத்தமிழர்களுக்கு ஆயுதங்களை வழங்கிய இந்தியா தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார மீள்கட்டமைப்பிற்கான ஆயுதங்களையும் தமிழர் தாயகத்திற்கு வழங்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.