சாய்ந்தமருதில் வர்த்தக கண்காட்சியும் விற்பனை சந்தையும்
சாய்ந்தமருது(Sainthamaruthu) பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்க கருத்திட்ட பிரிவின் ஏற்பாட்டில் "சமுர்த்தி அபிமானி" வர்த்தக கண்காட்சியும் விற்பனைச் சந்தையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது வொலிவேரியன் பல்தேவைக் கட்டிட மண்டப வளாகத்தில் இது நடைபெற்றுள்ளது.
கண்காட்சி
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
சமுர்த்தி கருத்திட்ட சிரேஷ்ட முகாமையாளர் எஸ்.றிபாயாவின் நெறிப்படுத்தலில் தலைமைப் பீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சி.ஏ.நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளார்.
மேலும், இதில் சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் றியாத் ஏ.மஜீத் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




