செயற்கை நுண்ணறிவினால் இயங்கும் ஸ்மார்ட் மோதிரம்: சாம்சங்கின் புதிய வரவு
செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் ஸ்மார்ட் மோதிரத்தினை சாம்சங் (Samsung) நிறுவனம் உருவாக்கியுள்ளதாக தகவல்தகள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில், செயற்கை நுண்ணறிவு மூலம் மக்கள் தங்கள் அன்றாட ஆரோக்கியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுவதை நோக்கமாகக் கொண்டு குறித்த ஸ்மார்ட் மோதிரம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதனடிப்படையில், ஒருமுறை மின்னேற்றம் செய்தால் இந்த ஸ்மார்ட் மோதிரத்தின் மின்கலம் ஏழு நாட்கள் வரை தொய்வின்றி வேலை செய்வதுடன், தண்ணீர் பட்டாலும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதய துடிப்பு
இந்த மோதிரமானது நமது இதய துடிப்பு, தூக்கத்தின் நேரம், உடல் வெப்பநிலை, ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி, பணியாற்றும் நேரம், நடக்கும் நேரம் என அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருக்கும்.
மேலும், கலக்ஸி கையடக்க தொலைபேசிகளை இந்த மோதிரத்துடன் இணைத்துக்கொண்டால், ஒரு சில சிறிய தட்டல்கள் மூலம் புகைப்படம் எடுக்க முடியுமென்பதோடு அலாரங்களை கூட நிறுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |