ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகரின் 23ஆவது நினைவு தின நிகழ்வு(Photos)

Srilanka Muslim Congress Sri Lanka Politician Sammanthurai
By Fathima Sep 16, 2023 01:47 PM GMT
Fathima

Fathima

சம்மாந்துறையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகர் மறைந்த மர்ஹும் எம்.எச்.எம் அஸ்ரப்பின் 23 ஆவது நினைவு தின நிகழ்வு நடைபெற்றது.

குறித்த நினைவு தின நிகழ்வானது இன்று(16.09.2023) சம்மாந்துறையில் அமைந்துள்ள ஈ.சி.எம் நிறுவனத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சிறப்புறை

குறித்த நினைவு தினமானது நபீர் பௌண்டேசன் ஸ்தாபகரும் சமூக சேவகருமான பொறியியலாளர் உதுமான்கண்டு நபீர் ஏற்பாட்டில் நடைபெற்றதுடன் கிராஅத் நிகழ்வினை மௌலவி ஏ.சி சுபைர் ஹாமி மேற்கொண்டார்.

வரவேற்புரை சட்டத்தரணி நவாஸ் மேற்கொண்டதுடன் சம்மாந்துறை உலமா சபையின் கண்ணியமிக்க உலமாக்களால் கத்தமுல் குர்ஆன் நிகழ்வு நடைபெற்று அத்துடன் சிறப்புரையை சம்மாந்துறை ஜெலில் மௌலவி மேற்கொண்டதுடன் பிரதான உரையினை சபா முஹம்மது நஜாஹியும் வழங்கினார்.

இஸ்மாயில் நினைவு நாள்

தொடர்ந்து நன்றியுரையினை ஆசிரியர் ஏ.எல்.நயீம் மேற்கொண்டார். நிகழ்வின் இறுதியாக மூன்று மௌலவிமார்கள் கௌரவிப்பும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சம்மாந்துறை மைந்தன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ அன்வர் இஸ்மாயில் மறைந்து 16 வருடங்கள் நிறைவடைவதை தொடர்ந்தும் அங்கு கத்தமுல் குர்ஆன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 



 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery