அம்பாறை - சாய்ந்தமருது பகுதியில் வெள்ள நீரில் மூழ்கி மூவர் பலி

Ampara Accident
By Fathima Nov 27, 2025 07:48 AM GMT
Fathima

Fathima

அம்பாறை - சாய்ந்தமருது பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். 

கார் ஒன்று தடம்புரண்டு வெள்ள நீர் நிரம்பிய கால்வாய் ஒன்றில் மூழ்கியதால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. 

வைத்தியசாலையில் அனுமதி

இதன்போது, அனர்த்த முகாமைத்துவத்தில் ஈடுபடும் குழுவினர் சாய்ந்தமருது பிரதேச செயலக அனர்த்த செயலணி பொலிஸார் இணைந்து மேற்கொண்ட மீட்புப்பணியின் போது கால்வாயில் வீழ்ந்த கார் மீட்கப்பட்டுள்ளது.

அம்பாறை - சாய்ந்தமருது பகுதியில் வெள்ள நீரில் மூழ்கி மூவர் பலி | Sammandurai Car Accident 3 Death

மேலும் காரில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் மீட்கப்பட்டு  கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், குறித்த மூவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery