உருவாகும் உப்பு மாபியா!அரசு மீது ஹக்கீம் சாடல்
புத்தளத்தின் உப்பள பிரச்சினைக்கு தீர்வு தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றையதினம் (22) இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், புத்தளம் பிரதேசத்தில் பூர்வீகக்காணிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த உப்பள சங்கத்தின் உற்பத்தி தடைசெய்து அவர்களை அங்கிருந்து அகற்ற வேண்டுமென்பதற்காக திட்டமிட்டு காணிகளை அரசு அபகரித்துக் கொண்டது.
பாரிய பிரச்சினை
அது மட்டுமல்ல, நீண்டகாலமாக அவர்கள் உப்பு உற்பத்தி செய்து வந்த காணிகளை வேறு நபர்களுக்கு வழங்கும் நோக்கில் கடந்த அரசாங்க காலத்தில் சில விடயங்கள் நடந்தேறின.
1-3% இருந்த உவர்த்தன்மை இன்று 0.5% இருந்து 1% வரையுள்ளது. எனவே தான் உப்பு உற்பத்தியில் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை அங்கிருக்கின்ற உப்பள உரிமையாளர்களும் ஏற்கனவே அரசுக்கு அறிவித்துள்ளார்கள். ஆனால், புத்தளத்தில் அதற்கான அதிகாரமுள்ள எவருமில்லை.
அரசாங்கத்தினூடாக எந்தவிதமான உதவிகளும் வழங்கப்படுவதில்லையென்ற பாரிய பிரச்சினையுள்ளது. எனவே, இவற்றையெல்லாம் கவனத்திற்கொண்டு உப்பு பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காண்பதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |