உப்பின் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்

Sri Lanka India Economy of Sri Lanka Money Weather
By Rakshana MA Dec 05, 2024 07:07 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டில் எதிர்வரும் நாட்களில் உப்பின் விலை அதிகரிக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து வரும் பண்டிகைக் காலத்தில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படுவதுடன் விலையும் சடுதியாக உயர வாய்ப்புள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மின்சார கட்டணம் குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

மின்சார கட்டணம் குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

 அதிகரிக்கும் உப்பின் விலை

கடந்த காலங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, இந்த நிலையை தவிர்ப்பதற்காக இந்தியாவில் இருந்து உப்பை விரைவில் இறக்குமதி செய்வது சிறந்து எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உப்பின் விலையில் ஏற்படப்போகும் மாற்றம் | Salt Price In Sri Lanka

தொடர்ந்து பெய்து வந்த மழை காரணமாக உப்பு உற்பத்தி முடங்கிப் போயுள்ளதாகவும், இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி நிற்பதால், அதிக அளவு உப்பு கரைந்து நாசமாகியுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனமை குறிப்பிடத்தக்கது.

கல்விச் செலவிற்காக 6 ஆயிரம் ரூபா! அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

கல்விச் செலவிற்காக 6 ஆயிரம் ரூபா! அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW