பொதுமக்களுக்கு சுமை ஏற்படுத்தாத வகையில் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் தயார்: ரஞ்சித்

By Fathima Nov 07, 2023 03:01 PM GMT
Fathima

Fathima

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி மக்களுக்கு அழுத்தம் கொடுக்காத வகையில் நடைமுறைப்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை தவணை முறையில் உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்ட பிரேரணைக்கு முன்னர் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி 100,000 கையொப்பங்களுடன் மனுவொன்றை ஏற்றுக்கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரச ஊழியர்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் தொடர்பில் அரசாங்கம் எப்பொழுதும் விழிப்புடன் இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், 1.4 மில்லியன் அரச ஊழியர்கள் மற்றும் 600,000 ஓய்வூதியதாரர்களின் சம்பளம் குறைந்தபட்சம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டால் எவ்வளவு பணம் செலவிடப்படும் என்பதை அரசாங்கம் அறிந்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.