தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

Parliament of Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples Money
By Laksi Apr 02, 2025 07:55 AM GMT
Laksi

Laksi

தனியார் துறை ஊழியர்களின் மாதாந்திர குறைந்தபட்ச ஊதியத்தை 27,000 ரூபாயாக உயர்த்துவதற்கான சட்டத் திருத்தங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தொழிலாளர் அமைச்சு அறிவித்துள்ளது.

அத்தோடு, அமைச்சரவைக்கு பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் மே மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

வும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, ​​தனியார் துறை ஊழியர்களுக்கான மாதாந்த குறைந்தபட்ச சம்பளம் 21,000 ரூபாவாக உள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

சம்பள உயர்வு

அத்தோடு, சம்பள உயர்வு இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு ஏற்ப உள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல் | Salary Increase For Private Sector Employees

குறித்த திருத்தத்தை தொடர்ந்து, தனியார் துறை ஊழியர்களுக்கான மாதாந்த குறைந்தபட்ச சம்பளம் அடுத்த ஆண்டு 35,000 ரூபாவாக உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் பழுதடைந்த பழ விற்பனை அதிகரிப்பு!

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் பழுதடைந்த பழ விற்பனை அதிகரிப்பு!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW