சம்பள அதிகரிப்பு கோரி நாடு தழுவிய போராட்டம்
அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி இன்றைய தினம் நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
இன்றைய தினம் அனைத்து அரசாங்க நிறுவனங்களின் எதிரிலும் இந்த எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்க மற்றும் மாகாண அரசாங்க தொழிற்சங்கங்கள் சில வற்றின் கூட்டமைப்பு இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.
20 ஆயிரம் ரூபாவினால் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும், அதிகரிக்கப்படும் சம்பளம் ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட வேண்டும், 2016 ஆம் ஆண்டு முதல் முழுமையான ஓய்வூதிய கொடுப்பனவு ரத்து செய்யப்பட்டமை மீள வேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி இன்று நண்பர்கள் 12 மணிக்கு மதிய உணவு இடைவேளியின் போது அரசாங்க நிறுவனங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.
இதன் பிரதான போராட்டம் பத்திரமுள்ள செத்சிறிபாய எதிரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை நாடு நெருக்கடியில் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அரசியல் நோக்கங்களுக்காக ஏற்பாடு செய்யப்படும் இவ்வாறான போராட்டங்களை அனுமதிக்க முடியாது என ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்தினபிரிய தெரிவித்துள்ளார்.