வடக்கு - கிழக்கு பகுதிகளில் சஜித்தின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: ஹிஸ்புல்லா
நாட்டின் வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து பகுதிகளிலும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றக்கூடிய வகையிலும், நாட்டின் பொருளாதாரத்தினை முன்னேற்றக்கூடிய வகையிலும் சஜித் பிரேதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு கல்லடியில் இன்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சஜித்திற்கு ஆதரவு
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று தமிழரசு கட்சி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ள விடயத்தை நாம் வரவேற்று பாராட்டுகின்றோம்.
இதன் மூலம் வடக்கு கிழக்கு அனைத்து மாவட்டங்களிலும் மூவின மக்களாலும் நேசிக்கப்பட்டு ஒரு வெற்றி வேட்பாளராக சஜித் பிரேமதாச காணப்படுகின்றார்.
இதன் மூலம் வடக்கு கிழக்கில் நிலவுகின்ற அதிகார பிரச்சனைகளுக்குரிய தீர்வு, அபிவிருத்தியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியுள்ள வடக்கு கிழக்கு பகுதிகளுக்கான விசேட அபிவிருத்தி திட்ட செயற்பாடுகளை வெளிநாட்டு நிதி உதவியுடன் முன்னெடுக்க உள்ளார்.
எனவே, வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மக்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வெற்றியின் பங்காளர்களாக வேண்டுமென ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |